கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உதகையில் நடைபெறவுள்ள 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைக்க, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் இத்தருனத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 1519 ஏரிகளில்  குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. மேலும், 300 கோடி ரூபாய் திட்டத்தில் 2220 ஏரிகள்  தூர்வார  அரசு  நடவடிக்கை எடுத்துவருகிறது.

அடுத்த வாரத்திலேயே மேட்டூர் அணை தூர்வாரப்படும். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும்  மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயிர் காப்பீடு திட்டம் மூலம்  பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குடி நீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் வறட்சி நிவாரண நிதி வழங்கும் பட்டியலில், விடுபட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுதப்பட்டுள்ளது'' என்றார்.

இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைவது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு , பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். பின்னர் சாலை மார்கமாக மலர் கண்காட்சி விழாவில் கலந்து கொள்ள  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை புறப்பட்டார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...