முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கோவை: தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உருவ கேலி செய்யும் வகையில் முதல்வர் விஜய்யின் பேச்சு இருந்ததாக கூறி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, திமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் செப். 12-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, எம்.எல்.ஏ. சுதாகர், தீர்மானக்குழு செயலாளர் நா. கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம். தண்டபாணி, வழக்கறிஞர்கள் அருள்மொழி, ராஜீவ்காந்தி, கணேஷ்குமார், முன்னாள் எம்.பி. நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், திமுக தலைவரை மட்டுமின்றி அதன் சித்தாந்தத்தையும் விஜய் கொச்சைப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். எந்த உருவத்தில் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியாத முதல்வர் விஜய், அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தி வருவதாகவும், அவரது ஆட்சியில் தொழில் வளர்ச்சி முடங்கியுள்ளதாகவும் துரை செந்தமிழ்செல்வன் விமர்சித்தார். கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவால் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பேசுகையில், திமுக தலைவர் மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது விஜய் பிறந்திருக்கவில்லை என கூறியதுடன், வரும் இடைத்தேர்தலில் திமுகவின் பலத்தை நிரூபிப்போம் என்றார்.

தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு திமுக தக்க பதிலடி கொடுக்கும் என்றார்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முதல்வர் விஜய்க்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...