பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில், கடலூர் வடலூரை சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டம் (குண்டர் சட்டம்) பாய்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் உத்தரவின் பேரில் செப்டம்பர் 14, 2026 அன்று தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, கோயமுத்தூர் மத்திய சிறையில் இருந்து வரும் கணேசமூர்த்திக்கு அது சார்பு செய்யப்பட்டது. இதற்கு முன் ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


Coimbatore: மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திய வழக்கில், கடலூர் வடலூரை சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டம் (குண்டர் சட்டம்) பாய்ந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் உத்தரவின் பேரில் செப்டம்பர் 14, 2026 அன்று தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது கோயமுத்தூர் மத்திய சிறையில் காவலில் இருக்கும் கணேசமூர்த்திக்கு அது சார்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார் மீனா உத்திரவின் பேரிலும், அத்துறை கனம் காவல் கண்காணிப்பாளர் R.சீனிவாச பெருமாள் மதுரை மண்டலம் (பொறுப்பு) கோயம்புத்தூர் மண்டலம் அவர்களது அறிவுரைப்படியும், கோயம்புத்தூர் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் S.மரியமுத்து அவர்களது மேற்பார்வையிலும் ஆகஸ்ட் 28, 2026 அன்று காலை 6.30 மணிக்கு கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. வேளாண்மை அலுவலர் நாக சுப்பிரமணியம் தன் குழுவினருடன் கோவை to பாலக்காடு ரோட்டில் மதுக்கரை RTO சோதனைச்சாவடி அருகே வாகனத்தணிக்கை மேற்கொண்ட போது, TN 32 AH 9612 பதிவெண் கொண்ட Ashok Leyland Tarrus லாரியில் சுமார் 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகள் கடத்திச்செல்லப்படுவது கண்டறியப்பட்டது.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் அவரது தம்பி செந்தில்குமரன் நடத்தி வரும் பாரத் யூரியா உர கடையிலிருந்து இந்த மூட்டைகள், கடலூர் to விருத்தாசலம் மெயின் ரோட்டில் விருத்தாசலம் டோல்கேட் அருகே லோடு ஏற்றப்பட்டு கடத்தப்பட்டது. கடலூர் பண்ரூட்டி மாளிகை மேடு பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் மணிகண்டன் மற்றும் கடலூர் லட்சுமி நாராயணபுரம் NGK நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பூங்காவனம் ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த பாரத் யூரியா உர புரோக்கர் தனபால் மூலமாக, கேரளா மாநிலம் எர்ணாகுளம் அல்லப்பாராவை சேர்ந்த முகமது பாசில் என்பவரின் உதவியுடன், Perumbavur, Plywood Manufactures Consortium Pvt Ltd, Sidco Industrial Park, Angamali, Kerala நிறுவனத்தின் மேனேஜர் பெயின் மூலமாக இந்த உரம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பொள்ளாச்சி CSCID அலகில் எண்.283/2026 என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. எதிரிகளான மணிகண்டன் மற்றும் பூங்காவனம் ஆகியோர் ஆகஸ்ட் 28, 2026 அன்றும், உர வியாபாரிகளான கணேசமூர்த்தி, அவரது தம்பி செந்தில்குமரன் மற்றும் முகமது பாசில் ஆகியோர் ஆகஸ்ட் 29, 2026 அன்றும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கணேசமூர்த்தி தொடர்ந்து மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலம் பெரும்பாவூரில் உள்ள Perumbavur, Plywood Manufactures Consortium Pvt Ltd, Sidco Industrial Park, Angamali, Kerala நிறுவனத்திற்கு விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்ததாகவும், இதன் மூலம் அரசின் திட்டத்தை பாழ்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் L.முரளிதரன் அவர்களது பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார், கணேசமூர்த்தி மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.

மேலும், மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...