கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க நகராட்சி சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் திறந்த நிலையில் பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டது. வளாகத்தில் தேங்கியிருந்த நீரை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், திறந்த நிலையில் கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் நகராட்சி சுகாதாரத் துறையினர் தீவிர ஆய்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் வளாகத்தில், மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் திறந்த நிலையில் பொருட்கள்/கொள்கலன்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொசுப்புழு உற்பத்திக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு கூடலூர் நகராட்சியின் சார்பில் ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வளாகத்தில் தேங்கியிருந்த நீரை அகற்றி, இனிமேல் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...

பண்டிகை காலம்: சென்னை-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அக்டோபர் முதல் நவம்பர் 2026 வரை சென்னை-கொல்லம் இடைய...

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...