2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து, ரூ.200 தேர்வுக் கட்டணத்தை www.karuvoolam.tn.gov.in வழியாக e-Challan மூலம் செலுத்தி, மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2026. எழுத்துத் தேர்வு 26.11.2026 அன்றும், செய்முறை தேர்வு 27.11.2026 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Coimbatore: கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தப்படும்.
முழு தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus) மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு கட்டணமாக ரூ.200/- (இருநூறு ரூபாய் மட்டும்) செலுத்த வேண்டும். இதனை www.karuvoolam.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாக e-Challan மூலம் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு (Theory) 26.11.2026 அன்று கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 21.09.2026 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தனித்தேர்வராக சமர்ப்பிக்க கடைசி தேதி 09.10.2026 ஆகும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.