ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன் போட்டிகள் 2026-இல், கோவை மாநகர காவல்துறையின் போதைப்பொருள் கண்டறியும் நாய் மதனா மற்றும் கையாளுநர் தலைமைக்காவலர் M.அசோக்குமார் இரண்டாம் பரிசும், வெடிபொருள் கண்டறியும் நாய் மலர் மற்றும் கையாளுநர் தலைமைக்காவலர் P. செந்தில்குமார் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
Coimbatore: மாநில அளவிலான காவல்துறை பணித்திறன் போட்டிகள் 2026-இன் போதைப்பொருள் மற்றும் வெடிபொருள் துப்பறியும் நாய்கள் பிரிவில், கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த இரண்டு நாய்களும் அவற்றின் கையாளுநர்களும் இரண்டாம் பரிசு பெற்று சிறப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவரின் வழிகாட்டுதலின்படி, 2026 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான காவல்துறை பணித்திறன் போட்டிகள் (State Police Duty Meet - 2026)-இன் போதைப்பொருள் மற்றும் வெடிபொருள் துப்பறியும் நாய்கள் பிரிவு (Dog Events), 21.09.2026 முதல் 25.09.2026 வரை TSP Regimental Centre (RC)-இல் நடைபெற்றது.
இப்போட்டியில், போதைப்பொருள் மற்றும் வெடிபொருள் துப்பறியும் நாய்கள் பிரிவில், கோவை மாநகர காவல்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கண்டறியும் நாய் மதனா மற்றும் அதன் கையாளுநரான தலைமைக்காவலர் எண். 2471 M.அசோக்குமார் ஆகியோர் இரண்டாம் பரிசையும், வெடிபொருள் கண்டறியும் நாய் மலர் மற்றும் அதன் கையாளுநரான தலைமைக்காவலர் எண். 2464 P. செந்தில்குமார் ஆகியோர் இரண்டாம் பரிசையும் பெற்று கோவை மாநகர காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இச்சாதனை புரிந்த காவலர்களையும், அவர்களது போதைப்பொருள் மற்றும் வெடிபொருள் துப்பறியும் நாய்களையும், காவல் துறை தலைவர், மேற்கு மண்டலம், கோவை R.V.ரம்யா பாரதி, IPS., காவல் ஆணையர் (பொறுப்பு), கோவை மாநகரம் அவர்கள் வெகுவாக பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.