இங்கிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு

கோவை காந்திபுரம் புதிய சித்தாபுதூரை சேர்ந்த அரவிந்த்குமார், அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் மற்றும் அவர்களது நண்பர் தங்க ராபின்சன் ஆகியோர் சேர்ந்து, இங்கிலாந்தில் வேலை மற்றும் விசா வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கிங்ஸ்டன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: இங்கிலாந்தில் வேலை மற்றும் விசா வாங்கித் தருவதாக கூறி ஒருவரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில், கோவை காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தம்பதி உள்பட மூவரை தேடி வருகின்றனர்.

கோவை காந்திபுரம், புதிய சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி யுகன்யா வின்சென்ட். இவர்கள் இருவரும் சேர்ந்து 'எலைட் ஓவர்சீஸ் எஜுகேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்களுக்கு உறவினர் ஒருவர் மூலம் அறிமுகமான கிங்ஸ்டன் (40), என்பவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.

அப்போது அரவிந்த்குமார், இங்கிலாந்தில் தொழிலதிபராக இருப்பதாக கூறி அவரது நண்பரான தங்க ராபின்சன் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அரவிந்த்குமார், யுகன்யா வின்சென்ட், தங்க ராபின்சன் ஆகிய மூவரும் சேர்ந்து, தங்களது கல்வி ஆலோசனை நிறுவனம் மூலம் இங்கிலாந்தில் நல்ல வேலை மற்றும் விசா பெற்றுத் தருவதாக உறுதி அளித்து உள்ளனர்.

இவர்களது வார்த்தையை உண்மை என நம்பிய அந்த நபர், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரவிந்த்குமார் மற்றும் யுகன்யா வின்சென்ட்டின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து 2024 பிப்ரவரி மாதத்தில் அரவிந்த்குமார் மற்றும் தங்க ராபின்சனுக்கு மேலும் ரூ.10 லட்சம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தம் ரூ.20 லட்சத்தைப் பெற்றுக்கொண்ட மூவரும், உறுதி அளித்தபடி எந்த வேலையும் விசா ஆவணங்களும் பெற்றுத் தராமல் இழுத்தடித்து ஏமாற்றி வந்ததாக பாதிக்கப்பட்ட நபர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து மூவர் மீதும் 120(b), 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....