கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தொழில்வரி ஆகியவற்றை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையர் கட்டா ரவி தேஜா அறிவித்துள்ளார். பொதுமக்கள் வசதிக்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 3 இடங்கள் வீதம் மொத்தம் 15 இடங்களில் சிறப்பு வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் செயல்படும். ரொக்கம், கடன்/பற்று அட்டை, காசோலை, வங்கி வரைவோலை, Google Pay, Phone Pay, Paytm மற்றும் http://tnurbanepay.tn.gov.in இணையதளம் மூலமும் வரி செலுத்தலாம்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தொழில்வரி ஆகியவற்றை வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1995 பிரிவு 83(4)ன்படி இந்த வரிகளைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வரி செலுத்துவதை எளிதாக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும் 3 இடங்கள் வீதம் மொத்தம் 15 இடங்களில் சிறப்பு வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ரொக்கமாகவும், கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை, வங்கி வரைவோலை, Google pay, Phone pay, Paytm போன்ற App மூலமாகவும், http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் வரிகளைச் செலுத்தலாம். இதன் மூலம் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையர் கட்டா ரவி தேஜா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....