கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்தனர். பொதுமக்களிடம் விசாரித்தும் உரிமையாளர்கள் யாரும் முன்வராததால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை திருடப்பட்டவையா அல்லது குற்றச் செயல்களுக்காக கொண்டு வரப்பட்டவையா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை ராமநாதபுரம் பகுதியில் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக உரிமையாளர்கள் யாரும் இல்லாமல் கேட்பாரற்ற நிலையில் 10 இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

சந்தேகம் அடைந்த போலீசார் அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்களிடம் வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அந்த வாகனங்களுக்கு உரிமை கோரி யாரும் முன்வரவில்லை.

இதை அடுத்து 10 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் திருடப்பட்டவையா அல்லது ஏதேனும் குற்றச் செயல்களுக்காகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவையா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....