கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தெற்கு, கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட வார்டு எண்.96, 92, 40 மற்றும் 8-க்குட்பட்ட சேரன்மாநகர், குறிச்சி, கோவைப்புதூர், வீரகேரளம் பகுதிகளில் இந்த முகாம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சமூக நாய்களுக்கான மாபெரும் வெறிநோய் தடுப்பூசி முகாம்களில் இன்று ஒரே நாளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மேற்கு மாநகராட்சி சார்பில் தெற்கு, கிழக்கு மற்றும் மண்டலங்களுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் இன்று (26.09.2026) நடைபெற்ற சமூக நாய்களுக்கான தீவிர வெறிநோய் தடுப்பூசி (Anti-Rabies Vaccination-ARV) முகாமில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளில் சுமார் 111,074 சமூக நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சமூக நாய்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வெறிநாய் நோய் பரவுவதைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.96, 92, 40 மற்றும் 8-க்குட்பட்ட சேரன்மாநகர், குறிச்சி, கோவைப்புதூர், வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இன்று (26.09.2026) ஒரே நாளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெறிநாய் நோயைத் தடுப்பதில் சமூக நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துதல், விலங்குகள் நலன் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மாபெரும் ARV முகாம்கள் நடத்தப்பட்டு எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் வெறிநோய் இல்லாத நிலையை (Zero Rabies by 2030) அடைவதை இலக்காகக் கொண்டு கோவை மாநகராட்சி தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....