கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா புகார்

கோவில் வரும் பக்தர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கோரி பாரத் சேனா அமைப்பினர் இன்று புகார் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து பாரத் சேனா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் பொதுச் செயலாளர் உங்கள் சிவா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசிதிபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடவும் திதி கொடுக்கவும் வரும் பக்தர்களை ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கடித்து கொலை செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில் நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து இச்செயலை தடுத்து நிறுத்தவில்லை எனில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பாரத் சேனாவின் தொண்டர்கள் நிறுத்தப்படுவார்கள். 

கோவில் நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பக்தர்களையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி பாரத் சேனா சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...