தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் ஒரு கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வர உரிமையுண்டு என தெரிவித்தார். அரசியலில் பெரியார் பாதையை பின்பற்றுவேன் என கூறிய ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தை தவறான பாதையில் நடத்திய சென்றவர் ஈவெரா என பதிலளித்தார். தமிழகத்தில் பெரியார் பாதை என்பது இந்து விரோத பாதை என கூறிய அவர், அந்த பாதையை ஆன்மிகவாதியான ரஜினிகாந்த் ஏற்று கொள்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசை பாஜக மறைமுகமாக இயக்கமாட்டோம் எனவும், நேரடையாக இயக்குவோம் எனவும் கூறிய அவர், பாஜக தமிழக அரசியல் சூழலை பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டுபவர்கள் அரசியல் அரிசுவடி தெரியாதவர்கள் என தெரிவித்தார். பாஜகவினர் ஒன்றும் சந்நாசிகள் அல்ல எனவும், சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் ஆட்சிக்கு வர பாஜக முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். ஜானகி, ஜெயலலிதா சண்டையை பயன்படுத்து திமுக ஆட்சிக்கு வந்தது தவறில்லை என்றால், இதுவும் தவறு இல்லை என அவர் தெரிவித்தார். இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இந்தி படிக்கக்கூடாது என தமிழக மக்களை கிணற்று தவளைகளாக்க திமுக முயற்சிக்கிறது எனவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழிக்கு பாஜக பற்றி பேச அருகதை கிடையாது எனவும், பாஜக நிறுத்தும் வேட்பாளர் தான் குடியரசு தலைவராக முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

திகார் சிறையில் உள்ள அதிமுக துணைபொதுச்செயலாளர் தினகரனுக்கு கம்பெனி கொடுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் விரைவில் சிறைக்கு செல்வார் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...