பலவினமாக உள்ள தமிழக அரசை மிரட்டும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பேட்டி


தமிழகத்தில் மத்திய அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்வது, பலவீனமாக உள்ள தமிழக அரசை மிரட்டிப்பார்க்கும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் புணரமைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமையகமான ஜீவா இல்லத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று திறந்து வைத்தார்.



இதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்தில் வறட்சி, மதுவிலக்கு, மருத்துவ மேல்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து, காவிரி நதிநீர் மேல்வாரியம் என பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீது அரசும், காவல்துறையும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களின் நலன்கள் மீது அக்கறையின்றி செயல்படும் மாநில அரசு தங்களின் பதவியை காத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. 

தமிழகத்தில் 9-வது முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரையிலும் இதுவரை தமிழகத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் ஆய்வு நடத்தியது இல்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சரையே நேரடியாக மத்திய அமைச்சர் மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று. 

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் எந்த விதமான பாரபட்சமுமின்றி ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தை உடனடியாகக்கூட்டி மானியக்கோரிக்கையை நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக-வின் இரு அணிகளும் இணைவது எடப்பாடி கையிலோ, ஓ.பன்னீர் செல்வம் கையிலோ இல்லை. இவ்விவகாரம் பிரதமர் மோடியின் கையில் இருக்கிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.



முன்னதாக புதுப்பிக்கப்பட்ட ஜீவா இல்லத்தை இரா.முத்தரசன் மற்றும் பொதுவுடமை தலைவர் ஜீவா அவர்களின் உருவச்சிலையை மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம் மற்றும் தங்கவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...