அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.

குடியரசு தலைவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து, அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி போன்ற மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. 

நேற்று எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை சந்தித்து தொகுதி கோரிக்கைகளை தெரிவிக்கவே வந்தனர். எம்.ஏல்.ஏ கூட்டத்தை கூட்டச்சொன்னது குறித்து தனக்கு தெரியாது" என கூறினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தடம் புரள்வதாக ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, இரண்டு அணியும் ஒன்றாக சேரவேண்டும் என்பதே தனது கருத்து' என்றார்.

மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தெரிவித்தார். பத்திரிகையில் எதாவது செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...