இளைஞர்களால் தான் நாட்டில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரமுடியும்- லாரன்ஸ் பள்ளி ஆண்டு விழாவில் இந்திய ஜனாதிபதி சிறப்புரை

உதகையில் செயல்பட்டு வரும் லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



அன்பிற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே அனைவருக்கும் வணக்கம், லாரன்ஸ் பள்ளியின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நல்ல நாளில் மேதகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் அவர்களுக்கும், தலைமையாசிரியை சங்கீதா சீமா அவர்களுக்கும், பள்ளியின் நிர்வாக அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் பெருமைமிக்க பெற்றோர்களுக்கும், வரலாற்று சிறப்புமிக்க இப்பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்களைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கும் உற்சாகமுள்ள இளைய மாணவர்களிடையே உரையாட கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கம்பீரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நீங்கள் இந்திய தேசிய கொடியுடனும் உங்கள் பள்ளியின் கொடியுடனும் பெருமையுடன் நடத்திய அணிவகுப்பு உங்கள் பள்ளி மிகவும் சிறப்பாக செயல்படுவதை எனக்கு நிரூபிக்கின்றது.

என் அனுபவத்தில் எந்தஒரு நாடானாலும் அந்நாட்டின் இளைஞர்களால் தான் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரமுடியும். என் தலைமுறையும், பிந்தைய, முந்தைய தலைமுறைகளும் நமது இந்தியாவை இதுவரை செலுத்திக்கொண்டு வந்ததை இனி இளைய சமுதாயமான நீங்கள் முன்னெடுத்து உலக நாடுகள் நம் பிரகாசமான வரலாறுக்காக மட்டுமல்லாமல் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உயர்வாக இந்தியாவை மதிப்பீடு செய்யும்படி செய்ய வேண்டும்.

இயற்கையில் தாவரங்கள் தான் வேரூன்றி நின்று வாழ்வதுடன் தன் விதைகளை பரப்பி விருட்சங்களைப் பரப்பி தொடர்ந்து மலரச் செய்கின்றன. இந்த ஒப்புமை நமது பண்டைய இந்தியாவின் கலாச்சாரத்திற்கும் பொருந்தும். அது இந்தப் பள்ளியிலும் தொடர்வதைக் காண்கிறேன்.

159 வருட பாரம்பரியத்தையும், உயரிய மதிப்பினையும் கொண்டு உங்களுக்கு ஆணிவேராக இப்பள்ளி விளங்குகிறது. இந்த உறுதியான அடித்தளத்தின் மேல் வாழும், குழந்தைகளான நீங்கள், இந்தப்பள்ளியையும், சமுதாயத்தையும் வளர்ச்சியின் சிகரத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகள் ஒன்று சேர்ந்த சங்கமமாய் பயில்வதை அவர்களின் பாக்கியம் என்று தான் நான் கணிக்கிறேன். இந்த பயிற்றுவித்தல் மற்றும் உங்களின் தனித்துவம், சுதந்திரமான உறைவிடப்பள்ளி அனுபவம் ஒரு அரிய பரிசு. இந்த அரிய படிப்பினையை உங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் பரப்புங்கள். அதன் மூலம் உங்களை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதன் பலனை பெறட்டும்.

இதுபோன்ற மைல் கற்களை கடந்து வரும் இந்தப் பள்ளிக்கு பெற்றோர்களின் உறுதியான ஆதரவு எவ்வளவு உள்ளது என்பதை இங்கு திரளாக வந்திருப்பதைக்கண்டே உணர முடிகிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உறைவிடப்பள்ளி மாணவர்களின் உருவாக்கத்திற்கு பள்ளியின் பங்கு மிக அவசியம். அதேபோல் பெற்றோர்களின் ஆதரவும் ஊக்கமும் மிக அவசியமாகிறது. 

இந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் அவரவர் துறைகளில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருப்பதாக நான் அறிகிறேன். அவர்களைப் போல் நீங்களும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். அவர்களை உங்களுக்கு தூண்டுதலாகக் கொள்ளுங்கள். இது பொருள்சார்ந்த முதலாளித்துவ வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக சேவையையும் உங்களின் இலக்காக கொள்ளுங்கள்.

160 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இந்தப்பள்ளியின் சாதனையை முந்தக் கூடிய பள்ளிகள் அதிகமில்லை. இந்தப் பள்ளியின் முந்தைய மகிமையை மீட்டு தக்கவைத்துக் கொண்டு அதேசமயம் இந்தப்பள்ளியின் நம்பகமான பெயரை புதுஉயரங்களுக்குக் கொண்டுச் செல்லும் திருமதி சங்கீதா சீமா அவர்களை வாழ்த்துகிறேன்.



இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் இந்தப் பள்ளியின் தூண்களாக இருப்பதற்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் உங்கள் கனவுகள் மற்றும் மனம் விரும்பிய செயல்களில் வெற்றிப்பெற்று உங்கள் மனதிற்கு நெருக்கமான உங்கள் பள்ளியை மேலும் குறைந்தது 159 வருடங்களுக்கு பள்ளியின் கொடியை பறக்க விடுங்கள்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...