அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மேட்டுபாளையம் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்ராஜ் மற்றும் கவுன்சிலர் அசோக் குமார்  ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக இரு அணிகள் இணைப்பே வேண்டாம், உங்களுடன் இணைந்தால் எங்களுக்கு மரியாதை இருக்காது பணம், பதவிக்காக சசிகலா குடும்ப அணிக்கு சென்ற 122 எம்.எல்.ஏக்களும் பல பிரிவுகளாக இயங்குகின்றனர். ஒரே தலைமையின் கீழ் ஒபிஎஸ் அணி இயங்குகிறது இரண்டு முறை.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஒபிஎஸ். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் ஒபிஎஸ் அணி வெற்றி பெறும். கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளையும் ஒபிஎஸ் அணி கைப்பற்றும். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும் என்றார்.

பின்னர், பேசிய மேட்டுபாளையம் எம்.எல்.ஏ ஒகே.சின்ராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணங்களுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது ஜெ உயிருடன் இருந்த போது, அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் கையில் ஆட்சி உள்ளது இரண்டு அணிகள் இணைப்பு தொடர்பாக இதுவரை அழைப்பு இல்லை இரு அணிகள் இணைப்பு என எடப்பாடி அணியினர் கபட நாடகம் ஆடுகின்றனர் எடப்பாடி அணியுடன், ஒபிஎஸ் சேர்ந்தால் ஒபிஎஸ்க்கு வளர்ச்சியாக இல்லாமல் வீழ்ச்சியாக அமையும் என்றார்.



அதனை, தொடர்ந்து பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏக்கள் தொடக்கி வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...