ஜிஎஸ்டி வரியில் பொதுமக்களையும், வியாபாரிகளையும் தமிக அரசு சோதித்து வருகிறது- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் தமிழக அரசு பொதுமக்களையும், வியாபாரிகளையும் சோதித்துக் கொண்டு இருக்கின்றது எனவும் இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், நாளை அரசியல்வாதிகள் தான் மக்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

கோவை தனியார் கூட்ட அரங்கில் ஜிஎஸ்டி சட்டத்தால் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் 42 சதவிகிதம் விலை உயர்வு ஏற்படும். இதை எதிர் கொள்ள மக்கள் தயாராக வேண்டும். இந்த வரி விதிப்பை கண்டித்து நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் ஓட்டல் சங்கம், மருந்து வணிகர் சங்கம் ஆதரவு தர வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பினை கண்டித்து வரும் 30ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஏற்கனவே வரி விலக்கு இருந்த இஞ்சி, பூண்டு போன்றவற்றிக்கு கூட ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பூணூல், விபூதி, குங்குமம் போன்றவற்றிக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகை போன்றவற்றிக்கு விதிக்கப்படும் வரி விதிப்பினை பார்த்த பின்னர் ஜூன் 3 ம் தேதிக்கு பின்னர் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும். 

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் மாநில அரசு பொதுமக்களையும், வியாபாரிகளையும் சோதித்துக் கொண்டு இருக்கின்றது. இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நாளை அரசியல்வாதிகள்தான் மக்களை சந்திக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். மேலம், தற்போது தினமும் 3 கோடி லிட்டர் பால் தேவைபடுகின்றது. தரமான பால் கிடைக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசு தரும் குடிநீர் தரமல்லை என்றால் அரசுதான் பொறுப்பு. இதற்கு அமைச்சரையும், அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். பால் விற்பனையில் கலப்படம் என்றால் அதை அரசு தடை செய்ய வேண்டும். இரசாயனம் கலந்த பால் விற்பனைக்கு வருவதை ஆய்வு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு" இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...