குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்- மெத்தனம் காட்டும் மாநகராட்சி ஊழியர்கள்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக குறிப்பாக கோவையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீரை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவிப்பு விடுத்து வருகிறது. ஆனால், மாநகராட்சியின் தண்ணீர் விநியோகக் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



கோவை மாநகராட்சி, காந்திபுரம் வார்டு எண் 52-க்கு உட்பட்ட நூறடி சாலை எண்- 1 வீதி தொடர்ச்சியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யும் பாதாள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் ஒடி வருகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாளொன்றுக்கு காலை, மாலை என இரு வேளையில் சப்பை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது இங்கு நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த வார்டுக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரியிடம் தொடர்புகொண்டு புகார் அளித்தும் இன்று வரை இப்பிரச்சனையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

தண்ணீரை வீணடிக்க வேண்டாம் என்று அறிவிப்பு விட்டு, தண்ணீரை வீணடிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...