எஜுதர்மா சார்பில் கொடையாளர்கள், பயனாளர்கள் இன்று சந்திப்பு

எஜுதர்மா அறக்கட்டளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்வி, விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு, புதிய ஆராய்சியாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு உதவி வருகிறது. 



இதில், உலகம் முழுவதும் 700 கொடையாளர்கள் இணைந்து 200-க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு உதவி வருகின்றனர். இதில், தமிழகத்தில் 150 பேர் எஜுதர்மா மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இன்று, மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வரும் கொடையாளர்களும், மாணவ பயனாளர்களும் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. இநிகழ்ச்சியில் 30 நிதி உதவியாளர்கள், 150 மாணவர்கள் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிதாசன் பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் எஜுதர்மா மூலம் வழங்கப்படும் உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் சோர்வடையாமல் தங்களது இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, கேஜிஐஎஸ்எல் இயக்குநர் ஆர்.ரவிச்சந்தின், தற்போது எஜுதர்மா மூலம் பயனடைந்து வரும் மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் பிற மாணவர்களுக்கு, கல்வி மேற்கொள்ள சிரமப்படுவோருக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.



இந்நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் ராமசாமி, ரேடியோ மிர்ச்சி புகழ் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...