ஜி.எஸ்.டி சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த மனு முதலமைச்சரிடம் வழங்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜி.எஸ்.டி சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த கோரிக்கை மனுவை கோவை தொழில் அமைப்பினர் குழு வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பாக பல்வேறு தொழில்துறையினர், சிறு, குறு தொழில் அமைப்புகள், ஹோட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகளுடனும் அலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "ஜி.எஸ்.டி சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவை மாவட்டத்தில் உள்ள கொடீசியா, சீமா, சைமா, சிஸ்மா, டேக்ட் போன்ற 54 தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. மேலும் இக்கோரிக்கை தொடர்பாக 10 பேர் கொண்ட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் குழு வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி நிதி அமைச்சரையும், 2-ம் தேதி  முதலமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

தொழில் அமைப்புகள் குழுவினருடன் தானும் முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். ஜி.எஸ்.டி மட்டுமின்றி கோவை மாவட்டத்திற்கு தேவையான மேம்பாட்டு பணிகள் குறித்தும் முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளேன்.

கோவை விமானநிலையம் விரிவாக்கம் தொடர்பாக நில உரிமையாளர்களின் நியாமன கோரிக்கைகளும் கேட்கப்பட்டது, அதனை பரிசீலித்து நிறைவேற்றிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தின்முக்கிய அணையான சிறுவாணி அணையை தூருவாருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தமிழக அரசும் ஈஷா யோகா மையமும் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. சிறுவாணி தூர்வாருவது தொடர்பாக கேரள அரசிடமும் பேச்சு வார்த்தை நடைபெறும்.

ஜி.எஸ்.டி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குற்றச்சாட்டு தவறு" என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசியல் கட்டமைப்பு சரியில்லை என்ற ரஜினி கருத்திற்கு, கமல்காஹசனும் வலியுறுத்தி உள்ளது என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அரசும் சட்ட ஒழுங்கும் சரியாக உள்ளது. விமர்சனம் செய்யும் நடிகர்களுக்கும் இங்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...