மத்திய பாஜக அரசின் மாடுகளை விற்கத் தடைவிதிக்கும் சட்டத்திற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்


நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த தடைச்சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது. 

இந்தியாவின் பன்மைச் சூழலைச் சிதைக்கக்கூடியது, உணவு விசயத்தில் அரசின் தலையீடு என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலும் கூட. இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் தொடுக்கப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ள சூழலில், மத்திய அரசே இப்படியொரு ஜனநாயக விரோத அறிக்கையை வெளியிட்டுள்ளது வேதனைக்குரியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய இந்த அறிவிக்கை நடைமுறைச் சாத்தியமற்றது. பல்வேறு ஐயங்களுக்கு இடமளிக்கக்கூடியது. இந்திய விவசாயத்தை பாழ்படுத்தக்கூடியது.

இந்த அறிவிக்கை தலித்துகள், சிறுபான்மை மக்கள், விவசாயிகள், அடித்தட்டு மக்கள், ஏழைகள் ஆகியோரின் உரிமையைப் பறிப்பதுடன், இந்தத் தடை நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்தும் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசை ஆளும் பாஜகவின் மதவாதத்தையே வெளிப்படுத்துகிறது. வகுப்புவாத தீய சக்திகளின் பிடியில் மத்திய அரசு இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலில் ஈடுபட்டுவருவதை கைவிட வேண்டும்.

மாடுகள், மாநில அரசின் சட்டமியற்றும் பட்டியலிலும், மிருகவதைத் தடுப்புச்சட்டம் மத்திய மாநிலங்களின் பொதுப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ள சூழலில் மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையீடு செய்வது சரியான முறையல்ல.

மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்ட மாநிலங்களில் மாட்டை முன்னிறுத்தி மனிதர்களை அடித்துக் கொல்லும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில் இந்தத் தடையின் மூலம் இந்தியா முழுவதும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேற இச்சட்டம் வழிவகுக்கும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்வதுடன், ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மக்கள் விரோத சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த இயலாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

விவசாய பூமியான தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை நசுக்கும் இச்செயலுக்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து வகுப்புவாதம் காலூன்ற தமிழக அரசு துளியளவும் இடம் தரக்கூடாது.

நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் தீயசக்திகளின் வெறுப்புச் செயலுக்கு பொதுமக்கள் பலியாகிவிடாமல் மத, இன, அரசியல் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நின்று ஜனநாயக ரீதியில் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகச் சக்திகள் இதனை சிறுபான்மையினர், தலித்களின் பிரச்னையாகப் பார்க்காமல் இந்த மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்த முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து இந்தியாவின் பன்மைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும். மாடுகள் விற்பனைக்கு தடைவிதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்துகிறது", இவ்வாறு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...