வால்பாறையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோரும் நடைபெரும் கோடை விழா


கோவை மாவட்டத்தின் கோடை வசந்ததலமாக வால்பாறை இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிர மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து இயற்கை சூழலை ரசித்து செல்வார்கள். அரசு சார்பக ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று காலை துவங்கியது.



விழாவை ஒட்டி தோட்டக்கலை துறை சார்பாக 12,000 கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட கங்காரு மற்றும் ஒட்டகமும், 100 கிலோ காய்கறிகளால் செய்யப்பட்ட பறக்கும் குதிரையும், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. வனத்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. டான் டீ, ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை, சுகாதார துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, ஆவின் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார், தோட்டக்கலை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் விஜயகுமார், வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் நகராட்சி பொறியளர் ராஜகோபால் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 



தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் மூலனூர் மின்னல் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் நுன்னரிவு மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அரசு ஆண்கள் மேல் நிலப்பள்ளி, வால்பாறை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வால்பாறை தூய இருதய மேல் நிலைப்பள்ளி, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 



இவ்விழாவானது ஆண்டுதோரும் மே கடைசி வாரத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால் இவ்விழாவானது வருடம் தோரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் கோடைவிழா நடைபெறும் நாட்களை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்தால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இன்று மாலை நிறைவு பெரும் இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...