ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது தற்காலிகமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்படும்.

ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017 ஆம் கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 15ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்ய எலக்ட்ரீசியன், எம்எம்வி, பொருத்துனர், மின்சார கம்பி செலுத்துபவர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விபரங்கள் நேரடியாக 2017 மே 31 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதனை செய்திட இயலாத விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திட தக்கவழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசால் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு கட்டணங்கள் முற்றிலும் இலவசம். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மேலும், பயிற்சி பெரும் அனைவருக்கும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

இதற்கான கல்வித் தகுதி தொழிற் பிரிவுகளைப் பொறுத்து 8-ஆம், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை). அனைத்து பயிற்சியாளர்களுக்கும் என்ஐஎம்ஐ புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9942730555, 8940837678, 9894783226 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...