லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் வால்பாறையில் புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் சார்பில் வால்பாறை கோடை விழாவின் ஒருபகுதியாக கிராமப்புற ஓவியங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.



இக்கண்காட்சியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த கண்காட்சியில் லலித் கலாக்ஷேத்ரா மாணவர்கள் விக்னேஷ் ராஜ், முருகேசன், வீரகுமார் உள்ளிட்ட 14 பேர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றன. இதனை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். 

முன்னதாக, வால்பாறை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓவிய அறக்கட்டளை செயலாளர் விக்னேஷ் ராஜ் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யை கவுரவித்து உரையாற்றினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...