தண்ணீர் இன்றி தவிக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசு துறைகள் இயங்கி வரும் நிலையில் மனு அளிக்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். தற்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த துறைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.



இதன் காரணமாக பழைய கட்டிடத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் இந்த அலட்சிய நடவடிக்கை காரணமாக அரசு ஊழியர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் அரசு ஊழியர் கூறும் போது, "தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் தற்காலிகமாக கழிவறைகளும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் சொல்லிலடங்கா துயரத்திற்கு ஆளாகியுள்ளோம். மதிய உணவு அருந்திய பின் கைகளை கழுவுவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறாம்" என தெரிவித்தார். 

பழைய கட்டிடத்தில் இன்னும் பல துறைகள் செயல்பட்டு வரும் நிலையில் தண்ணீர் நிறுத்தியது அங்கு வரும் பொதுமக்களையும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே புதிய கட்டிடத்திற்கு மாறும் அலுவலகங்களில் உள்ள குப்பைகள் ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு உருவாகி வருகிறது. புதிய கட்டிடத்திலும் கழிவறைகள் திறக்கப்படாமல் இருப்பதால் அங்கும் இதே நிலை நீடித்து வருகின்றது.

சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டிய அரசு துறைகள் செயல்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீரின்றி சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...