மூளை சாவு அடைந்தவர் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

பொள்ளாச்சி தாலுகா, அங்களக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமியின் மனைவி வள்ளியம்மாள் (47). கடந்த 28 ஆம் தேதியன்று ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள அவரது மகன் கம்பெனியில் இருந்து அரவது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து சென்றுகொடிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதியன்று அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது கணவர் கிருஷ்ணசாமி மற்றும் மகன் மனோஜ்குமார் இணைந்து வள்ளியம்மாள் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.

அவரது இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு கேஎம்சிஎச் மருத்துவமனையில் தேவைப்பட்ட மூன்று நோயாளிகளுக்கு சிறந்த முறையில் பொருத்தப்பட்டது. 

இதுகுறித்து கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய வள்ளியம்மாள் குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...