கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெறும் 25 சதவிகித இடஒதுக்கீடு சேர்க்கை

கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது. 

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.

சொக்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவதை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை, எழிய மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 405 தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 193 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கணேசமூர்த்தி எச்சரித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...