கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்ததை அடுத்து லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

கோவை சித்தாபுதூர்- நவ இந்தியா இடையே தனலட்சுமி நகர் என்ற பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுமார் 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதுக்கடை வராது என அபோலீசார் உறுதியளித்தால் மட்டுமே கலைவதாக கூறி  பொதுமக்கள் சாலையில் அமர்ந்த படுத்தும் போராட்டத்தை தொடர்ந்தனர் .இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் தொடர்ந்ததையடுத்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார் பொதுமக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...