கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளை பிடிக்கும் பணியினை மேற்கொண்டு, விதி மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால், குழு அமைக்கப்பட்டு அதன் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பல்வேறு அறிவுறுத்தலுக்கு பின்னறும் முறையாக பராமரிக்காமல் பொது மக்களுக்கு இடையூராக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், பிடிக்கப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிமையாளர்கள் திரும்ப பெறாவிட்டால் அவற்றை மாநகராட்சியின் மூலம் நரசிபுரம் கிராமத்தில் செயல்படும் வெள்ளிங்கிரி கோசாலையில் விடப்படவேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிக்காக மாநராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால், அமைக்கப்பட்ட குழு பற்றிய விவரம்:

1. மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி மற்றும் அதன் அறிக்கையினை ஆணையர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

2. சுகாதார ஆய்வாளர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக செயல்பட்டு ஆய்வின் போது மண்டல சுகாதார அலுவர்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும்.

3. மாநகர நல அலுவலர், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் இந்த குழுவில் ஒருங்கிணைப்பு அலுவர்களாக செயல்பட்டு மண்டல சுகாதார அலுவலர்கள் சமர்பிக்கும் அறிக்கையினை ஒருங்கிணைத்து ஆணையர் மற்றும் துணை ஆணையர்க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வுத்தரவு உடன் அமலுக்கு வருகிறது. மேலும், அந்தந்த  மண்டலத்திலுள்ள சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு அந்தந்த மண்டல குழுவே பொறுப்பேற்க வேண்டும். என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...