பாஜக-வின் மூன்றாண்டு ஆட்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கடந்த மூன்று ஆண்டுகால பாஜக ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஓராண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்க்கப்படவில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று துவங்கி நாளை வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, சவுந்திரராஜன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநிலக் குழு கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டு கால பாஜக அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை. தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சட்டம் ஒழுங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை மாநில அரசு விமர்சிப்பதில்லை. அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கின்றது.

இந்த மாநிலக் குழு கூட்டத்தில் இந்தி திணிப்பு, வறட்சி, மாட்டிறைச்சி போன்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு இல்லை. சென்னை ஐஐடி-யில் தாக்குதலுக்குள்ளான சூரஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றது. தாக்கப்பட்ட சூரஜ் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

மாணவர்கள் கையை முறிக்கும் காவல் துறை, கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றது" இவ்வாறு சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...