கோவை பேங்க் ஆப் இந்தியா சார்பில் “ஸ்டார் மஹொத்சவ்” விழா

கோவை மண்டல பேங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்டார் மஹொத்சவ்’ விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழிப்புணர்வு விழா நாடு முழுவதும் உள்ள 5200 வங்கி கிளைகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமே வங்கி வாடிக்கையாளர்களை அவர்களின் வீடு தேடிச் சென்று சந்திப்பதுதான்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாராக் கடன் வசூல், புதிய வீட்டு, வாகன கடன்கள் வழங்குதல், தொழில் மற்றும் விவசாய கடன் வழங்குதல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பிஓஎஸ் மெஷின்கள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 

இந்த விழிப்புணர்வு விழாவை ஆர்.என். புரம் கிளையில் மண்டல மேலாளர் தி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். கிளை ஏ.ஜி.எம். டி.வி.ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வீடு, தொழில் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவி அளிக்கப்பட்டது. இதைத் தவிர, சூலூர், காந்திபுரம், கோவை பிரதான கிளை ஆகியவற்றில் நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவிலும் ரவீந்திரன் பங்கேற்று, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், சுவர்ணபுரி கிளையில், நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவை துணை மண்டல மேலாளர் டி.டி.சீனிவாச ராவ் துவக்கி வைத்தார். மதுரை ஜெய்ஹிந்த புரம் கிளை நடைபெற்ற விழாவை துணை மண்டல மேலாளர் கே.பாண்டியன் துவக்கி வைத்தார். 

கோவை மண்டலத்தில் நடைபெற்ற இவ்விழாவின் மூலமாக மொத்தமாக ரூ.46 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.3 கோடி மதிப்பிலான வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கிளை, துணை பொது மேலாளர், டி.வெங்கடேஷ்வர ராவ், கோவை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் கௌரிசங்கர் ராவ் மற்றும் வி.எஸ்.சோமசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...