தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினர்.


மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600 பெண்களுக்கு சுமார் 3 கோடியே 96 லட்சம் ரூபாய்  மதிப்பிலான தங்கம் மற்றும் நியியுதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் தற்போதைய தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற நிலையை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கடந்த 2011 ம் ஆண்டு முதல் இதுவரை தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் 27 ஆயிரத்து 563 பெண்களுக்கு சுமார் 131 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கான தங்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள்  எட்டிமடை சண்முகம், அம்மன் அர்ச்சுனன், சூலூர் கனகராஜ் மற்றும் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான  ஆறுகுட்டி, அருண்குமார், சின்ராஜ் என அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியல் கேள்விகளை தவிர்க்குமாறு அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...