உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களை இணைப்பது என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் அறக்கட்டளை மற்றும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் மருத்துவ மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்களை நட வேண்டுமெனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களும் இணைய வேண்டுமென்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...