கோவையை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராக்கிபாளையத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அம்மனுவில், ராக்கிபாளையத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும். ராக்கிபாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...