கல்குவாரியால் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இரும்பறை கிராமம் பெரியகோட்டம் புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியால் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 ஆண்டுகளாக அப்பெரியகோட்டம், புதூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்படுவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்கள் அறுந்து விழுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலியினால் காற்று மாசடைவதுடன், வேளாண் பொருட்கள் பாலாகி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். 

ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளதால் தங்களின் வாழ்வாதராம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...