உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி புதிய வடிவில் உருவாக்கப்பட்ட குப்பை ஏற்றிச் செல்லும் வாகனம் அறிமுகம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட தாமு நகர் 65-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 'சைப்ரஸ் ஓக்' அபார்ட்மெண்டில் குப்பை ஏற்றிச் செல்லும் பேட்டரி வாகனம் மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இது குறித்து கோவை மாவட்ட திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் சுரேஷ் பண்டாரி கூறுகையில்; கோவையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த குப்பை ஏற்றும் வாகனம் வீடு வீடாக சென்று குப்பையை தரம்பிரித்து ஏற்றி செல்வதற்கு உதவும்.



அதுமட்டுமல்லாமல், புதிதாக பச்சை மற்றும் நீலம் நிறத்தில் மினி டோர் குப்பை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பச்சை நிறம் வாகனம் மக்கும் குப்பைக்காகவும், நீல நிற வாகனம் மக்காத குப்பைக்காவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பச்சை நிறம் வாகனத்தில் குப்பையை கொட்டுவதற்கு எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது குப்பை தொட்டி நிறைந்த பின்னர், அதனை இந்த வாகனத்தின் பின் புறத்தில் உள்ள லாக் உதவியுடன் பொருத்தப்பட்டு தானியங்கி மூலம் வாகனத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த புதிய வடிவில் அமைக்கப்பட்ட குப்பை தொட்டியில் 120 லிட்டர் அளவில் கொள்ளளவு உடையதாகவும். நீலம் நிறத்தில் உள்ள வாகனம் சாதாரணமான முறையில் மக்காத குப்பைகளை கேரிபேக் மூலம் கட்டி எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...