கோவையில் மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை பலி


கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மஜீத் காலனியில் வசித்து வருபவர்கள் சல்மான் (18), பானுமா (16). இருவரும் அண்ணன் தங்கைகள். சல்மான் உக்கடம் மீன் சந்தையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கோவையில் இன்று பகல் 1 மணியளவில் பரவலாக கன மழை பெய்தது. அப்போது, பானுமா வீட்டின் மாடியில் உலரவைக்கப்பட போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சாரக் கம்பியினை பானுமா தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சல்மான், தங்கை பானுமாவை காப்பாற்ற சென்ற நிலையில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அண்ணன், தங்கை இருவரும் பலியாகினர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த உக்கடம் காவல் துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...