நீலகிரியில் மதுபானக் கடையினை அகற்றக் கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடந்துரை மூச்சாக்கன்டி பகுதியில் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடையினை திறந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற செய்லாளர் ராஜேந்திர பிரபு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் துயில்மேகம், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...