கோவையில் மழை நீருடன் கலந்து கழிவு நீரும் சாலையில் ஓடியதால் மக்கள் அவதி

கோவையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையுடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலாக பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ரயில்நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட நகர பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனிடையே ரயில் நிலையம் முன்பாக மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர். 



தொடர்ந்து கோவையில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...