நிலகிரியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் உட்பட 30-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இரசயல் கட்சியினர் என பலதரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காரைகொர்ன், ஜெகதளா தினட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் அதிகாரிகள் இதுவரை அப்பகுதியிலிருந்து கடையை அகற்றவில்லை.

இதனைத்தொடர்ந்து, இன்று டாஸ்மாக் கடை முன்பு தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணியினர் தலைமயில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், காவல்துறையினரின் தடைகளை மீறி தமிழ் மாநில இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜ் உட்பட 30-க்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் மீது அக்கறையின்றி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவழக்குகளில் சம்மந்தப்பட்ட டிடிவி தினகரனை சந்திப்பது கண்டனத்துக்குறியது. இதனை அவர்கள் தவிர்க்க வேண்டும் என கூறினார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...