கோவையில் மதுபோதையில் தகராரில் ஈடுபட்ட கணவரைக் கொன்ற மனைவி

கோவை மாவட்டம், இருகூர், மருதாச்சலம் தேவர் வீதியில் வசித்து வந்தவர் ஈஷ்வரன் (43). இவரது மனைவி பரிமலா தேவி (40). கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இத்தம்பதியினருக்கு வசந்தகுமார் (17) என்ற மகன் உள்ளார்.



தேங்காய் வியாபாரம் செய்துவந்த ஈஷ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அறிந்தி விட்டு மனைவியுடன் தகராரில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அதிகளவில் மது அறிந்திவிட்டு வீட்டிற்கு வந்த ஈஷ்வரன், பரிமலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு உறங்கியுள்ளார். அப்போது, மனவேதனையில் இருந்த பரிமலா கயிற்றின் மூலம் ஈஷ்வரனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது அண்ணன் திருநாவுக்கரசு-விற்கு (52) தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த திருநாவுக்கரசு, ஈஷ்வரனின் உடலை தூக்கிட்டு தற்கோலை செய்துகொண்டது போல் வீட்டின் கூறையில் கட்டிவிட்டபின், ஈஷ்வரனின் தம்பி நடராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அங்கு வந்த நடராஜன், இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் மற்றும் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி, பரிமாலா தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில், சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் தனது கனவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின், காவல்துறையினர் பரிமலா தேவி மற்றும் அவரது அண்ணன் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...