மேற்கு தமிழக வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சரிடம் குறிப்பாணை அளித்த கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பினர்

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளோர், மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் மற்றும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகள் இன்று கோவை வந்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மேற்கு தமிழக மேலாண்மை குறித்தான குறிப்பாணையினை வழங்கினர்.

அந்த குறிப்பாணையில், கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள விமான விரிவாக்கப் பணிகள் உடனடியாக துவங்க உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குண்டான சரியான வளர்ச்சிப் பணிகள் விமான நிலையத்தில் இல்லை.

மத்திய அரசு உடனடியாக இவ்விசத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், தமிழகத்தின் கிடப்பில் போடப்பட்டுள்ள பல வளர்ச்சித்திட்ட பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...