வால்பாறையில் கடும் பனிப்பொழிவு- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் பருவ மழை சரிவர பெய்யாததால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கின. வால்பாறையை நீராதாரமாகக் கொண்ட பல அணைகளும் வறண்டு காணப்பட்டன. 

குறிப்பாக, கடந்த ஆண்டு வால்பாறை பகுதியில் பருவமழை ஏமாற்றி விட்ட நிலையில், ஆறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீருக்குக் கூட பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். வால்பாறை பகுதியில் உள்ள சோலையார் அணை, நல்லார் அணை, பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வால்பாறையில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இதனிடையே தற்போது குளிர்ந்த காற்றுடன் கடும் பனியும் பொழிந்துவருகிறது.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை ஆழியார் முதல் வால்பாறை சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். வால்பாறை மலையில் உள்ள தேயிலை தோட்டங்களையும் பனிமூட்டம் மூடியுள்ள நிலையில் அதன் பிரமிப்பு மிக்க காட்சியினை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

எஸ்டேட் பகுதிகளில் இரவு, பகல் என கடும் குளிர் நிலவுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், தொழிலாளர்கள் அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...