தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த சந்திராபுரம் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டில் இடம் வழங்கப்படுவதில்லை எனவும், தங்களுக்கு என தனியே சுடுகாட்டிற்கான இடம் வழங்கக் கோரியும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



சந்திராபுரம் காலனியில் 40 குடும்பங்களாக 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கான சுடுகாடு மேற்படி ஊரில் ஒரு காட்டில் தான் இருந்தது. எங்கள் சமூகத்தில் இறப்பவர்களை அங்குதான் புதைத்து வந்தோம். அந்த இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா பூமி என்கிற விபரம் எங்களுக்கு இப்போது தான் தெரிய வந்தது. அதனால் நிலத்தின் உரிமையாளர் இனிமேல் அந்தக்காட்டினை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த மே மாதம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் சுடுகாட்டிற்கு கொண்டு போன போது மேற்படி உரிமையாளர் தடுத்து விட்டார். அதனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் எங்கள் பகுதிக்கு அருகில் (க.ச.323) என்ற இடத்தில் உள்ள நீர்வழிப் பாதையில் சடலத்தை புதைத்தொம். பல்வேறு சமூகத்தவர்களும் அங்குதான் புதைத்து வருகிறார்கள்.

அதன் பிறகு அப்பகுதி ஆதிக்கசாதியினர் சிலர் வந்து இது எங்கள் சுடுகாட்டு இடம், இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பிணம் புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மே 25ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு சூலூர் வட்டாட்சியர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்பேரில் ஆதிக்கசாதியினரையும், எங்களையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, ஆதிக்கசாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். மீறி அங்கு புதைத்தால் சமூக பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் பேசினர். இதனால், வட்டாட்சியர் அந்த மனுவை மேல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டார். 



எங்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் இடம் கொடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...