மாநகராட்சியின் பல்வேறு பணிகள் குறித்து 2-வது வார்டில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 2-வது வார்டுக்குட்பட்ட துடியலூர், வெள்ளக்கிணறு மெயின் ரோடு, லவ்லி கார்டன் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தையும், நேரு வீதி, காந்தி வீதி ஆகிய பகுதிகளில் ரூ.7.70 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு பகிர்மானக் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.



இதனிடையே, லவ்லி கார்டன் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வில் ஈடுபட்டபோது 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...