கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட்டுக்கு பென்டிரைவ் கொடுக்க முயன்ற இருவருக்கு நீதிமன்ற காவல்

கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட் அனூப்பிடம் ஆடையில் மறைத்து எடுத்துச்சென்று பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுகள் அனூப் மற்றும் சைனா ஆகியோரை பார்க்க கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகிய இருவர் நேற்று வந்தனர். சிறை அதிகாரிகள் அனுமதி பெற்று மாவோயிஸ்ட்டுகளை சந்திக்க சென்ற போது, அவர்கள் கையில் அனூப்பிற்கு கொடுக்க ஆடைகள் வைத்திருந்தனர்.

அந்த ஆடைகளை சோதனையிட்ட போது, சட்டையில் ஒரு பென் டிரைவ் இருப்பது தெரியவந்தது. அந்த பென் டிரைவினை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் எந்த தகவல்களும் இல்லை. இது குறித்து ரஷீது, சர்மா ஆகியோரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, சிறைவாசலில் இருந்த தினேஷ் என்பவர், அனூப்பிடம் இந்த சட்டையை வழங்கும் படி கூறியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரையும் சிறைத்துறை அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் தினேஷ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகிய இருவர் மீதும் தடை செய்யப்பட்ட பொருளை சிறைக்குள் எடுத்து செல்லுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ரஷீது என்பவர் கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்ட்டான மொய்தீன் என்பவரது சகோதரர் என்பது குறிப்பிடதக்கது.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று காலை கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலுசாமி முன்னிலையில் போலீசார் அஜர்படுத்தினர். இதையடுத்து, இருவரையும் வருகின்ற 27-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறைவைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...