கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்திற்கு 1 லோடு தண்ணீர் வழங்க 2600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பதில் கடிதத்தினை நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

நாள் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...