சேலம் ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிக் கழிவறைகள் திறப்பு

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களின் தலைமையில் ரயில்நிலையங்களை பயணிகளுக்கு மேலும் உதவும் வகையில் மாற்றும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, நாளை (14.06.2017) காலை சுமார் 9.30 மணியளில் சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறையை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால் அவர்கள், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு. விஜுவின் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைக்க உள்ளார்.



சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாகவும், இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளதுடன், நுழைவு வாயில் ஸ்லைடிங் வசதி கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன. 

இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறைகள் சமீபத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டன. மேலும் பல ரயில்நிலையங்களில் இந்த வசதி அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...