அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட லிங்கனூர் சாலை, அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகள், துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவது, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.





மேலும், அப்பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சிப் பூங்காவின் நடைபாதை பணிகள், சுற்றுசுவர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதையும், நீர்தேக்கத் தொட்டியின் நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து, குளோரின் அளவு போதுமான அளவு உள்ளதா என்பதையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.





Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...