ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை கிராஸ்கட் வீதியில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சட்டமன்றத்தில் வெளிடப்பு செய்யப்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை கிராஸ்கட் வீதியில் திமுக வடக்கு மாவட்ட மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாமல் அதிமுகவினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து மறியல் போராட்டம் நடத்திய திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



இதே போன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி முன்னாள் நகராட்சி தலைவர் பிரபாகரன் தலைமையில்  மறியலில் ஈடுபட்ட 36 பேரும் அவினாசி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுக வழகறிஞர் அணியினர் 14 பேரும் கைது செய்யபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...